Sunday, November 9, 2008

English Pratice

வார்த்தைகளின் விளையாட்டு

"நான் ஒரு தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இன்று நான் ஒரு கணிப்பொறியாளராக (SAP BW) பணியாற்றி வருகிறேன். இருப்பினும் என்னால் சரி வர ஆங்கிலம் பேச இயலவில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆதலால் எளிய வகையில் ஆங்கிலம் பேச பழக வழிவகை அல்லது (மென்பொருள்) இருந்தால் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை செய்தால் எனக்கு மட்டும் அல்ல என்போன்ற மக்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்." இது நம்மூர் சதீஸின் குரல். இது போல ஒன்றிரண்டு அல்ல பல சதீஸ்கள் இருக்கின்றார்கள். தமிழ் வழிக் கல்வி பள்ளியில் படித்துவெளி வருவோருக்கு இது மிகப்பெரியதொரு சோதனையே. ரெபிடெக்ஸ் மட்டுமே படித்துக்கொண்டிருந்தால் ஆங்கிலம் வருவதில்லை என்பதற்கு நானே உதாரணம். ஆனால் ரெபிடெக்ஸ் படித்து, ஆங்கில நாளிதழ்கள் புரட்டியதால் பல ஆங்கில வார்த்தைகள் பரிச்சயமானது என்பது மட்டும் உண்மை.இங்கே தியரி பகுதியில் உறுதி பெறுகின்றீர்கள்.

அடுத்து பிராக்டிக்கல்.

கொஞ்சமும் தமிழே தெரியாத ஒரு நபரை விடாப்பிடியாக பிடித்து நண்பராக்கிக் கொண்டு ,இப்போது சென்னையில் இதொன்றும் கடினமல்லவே, ஆங்கிலத்தில் அவரோடு தத்தக்க பித்தக்கவென்றாவது உரையாடத் தொடங்குங்கள். சீக்கிரத்தில் எல்லாமே சரியாகிவிடும். ஆங்கில திரைப்படங்களை சப்டைட்டிலோடு ஆங்கிலம் கற்கும் நோக்கிலேயே மட்டும் பார்க்கலாம் .அமெரிக்கா வரைக்கும் வந்துட்டும் சன்டிவி மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் எப்போது லோக்கல் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாம்.தொலைபேசியை எடுக்கக்கூட பயப்படுகின்றார்கள். சன்டிவி இல்லாத தமிழ்வீடுகளில் பொடிசுகளும் பெருசுகளும் எளிதாய் அமெரிக்க ஆங்கிலம் பேசுவதை புரிந்துகொள்வதை பார்த்திருக்கின்றேன்.இரண்டும் வேண்டும் என்கின்ற கோஷ்டி நான்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் சில சுட்டிகள்
நண்பர் அருண் எழுதும் ஆங்கிலம் கற்றுக்கொள்வோர்க்கான விசேட வலைப்பதிவு
http://aangilam.blogspot.com

Learn To Speak English Version 8.1 (4 CDs Download)-Rapidshare Megaupload Links
http://www.silentground.org/forums/software/9217-learn-speak-english-version-8-1-vol-1-4-a.html

இனி சில சுவாரஸ்யங்கள்:

  • Public house என்ற வார்த்தை தான் சுருங்கி Pub-ஆகிப் போனதாம். அங்கு டான்ஸ் ஃப்ளோரில் நடனமாட சத்தமாய் பாட்டு போடும் நண்பரை DJ அல்லது Deejay என்போம். இவ்வார்த்தை Disc Jockey என்பதின் சுருக்கமாம். அங்கே நீங்கள் Naked-ஆய் (means unprotected) போகலாம் ஆனால் Nude-டாய் அல்ல (means unclothed). மீறிப்போனால் காவல் துறையினர் அதாவது Cop வருவார்கள். உண்மையில் அவ்வார்த்தை Constable on Patrol-லின் சுருக்கமாம்.இது எப்படி இருக்கு :)
  • பெரும்பாலான கடிகார விளம்பரங்களில் கடிகாரங்கள் 10:10-ஐ தான் காட்டி நிற்கும்.காலை பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலை பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
  • United States அரசை Uncle Sam எனவும் கிண்டலாய் கூறுவர். அதன் பச்சை வண்ண டாலரை Greenback என்பர்.
  • Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் எனலாம்.
  • சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.
  • அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall( living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.
  • இந்துக்களின் பகவத்கீதை அதாவது பகவானின் கீதம் அல்லது "இறைவனின் பாடல்கள்" என பொருள்படும்.
  • இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அசலாம் அலைக்கும் "சமாதானம் உங்களோடிருக்கட்டும்" என பொருள்படும்.
  • கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஆமென் "அப்படியே ஆகட்டும்" என பொருள்படும்.
  • ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது இந்த நான்கு வார்த்தைகள் மட்டும் தான் tremendous, horrendous, stupendous, and hazardous
  • No word in the English language rhymes with month, orange, silver, and purple.
  • "The quick brown fox jumps over the lazy dog." என்ற வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
  • Abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரே குறுகிய வார்த்தை Feedback.
  • ஆங்கில தட்டச்சுபலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
  • "Stewardesses" is the longest word that is typed with only the left hand.
  • The only 15 letter word that can be spelled without repeating a letter is "uncopyrightable".
  • The longest word in the English language, according to the Oxford English Dictionary, is "pneumonoultramicroscopicsilicovolcanoconiosis". The only other word with the same amount of letters is "pneumonoultramicroscopicsilicovolcanoconioses", its plural.
  • லாஸ் ஏஞ்சலஸ் நகரின் ஆரம்பகாலப்பெயர் "El Pueblo de Nuestra Señora la Reina de los Ángeles de Porciuncula."
  • உலகிலேயே நீளமான பெயரைக் கொண்ட இடம் நியூசிலாந்திலுள்ளது. (படம்) Taumata­whakatangihanga koauau o tamatea turipukaka pikimaunga horo nuku pokaiwhenua kitana tahu (85 letters).
  • உலகிலேயே குறுகிய பெயரைக் கொண்ட இடம் நார்வேயிலுள்ளது. (படம்) A (1 letter)
  • Question: A word in which first 2letters means male,first 3letters means female,first 4letters means male & the whole word means female? Answer: Heroine

பழனியப்பா பிரதர்ஸ் பால்ஸ் ஈ ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் டிஷ்னரி இங்கே சிறு மென்பொருளாக. Palaniappa Bros Pals English - English - Tamil e-Dictionary software Download. Right click and Save.Download


No comments: