Friday, December 5, 2008

RapidShare-ல் தேடுவது எப்படி?




ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும்
பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9Aசாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து தருகிறது.
http://www.funfail.com/

மட்டுமல்லாது பிற file sharing தளங்கலான RapidShare, MegaUpload, TurboUpload, SendSpace போன்ற தளங்களையும் இது தேடி கொடுப்பதால் கூடுதல் நன்மை.(நம்மவர் யாராவது
RapidShare-ஐ தேட இன்னும் சக்தி வாய்ந்த Search Engine டெவெலப் செய்து கொண்டு வந்தால் இப்போதைக்கு நிறைய பணம் பண்ணலாம்.)

கூகிள் வழி rapidshare-ல் தேட Google -ல் இதை டைப்புங்கள்

Video files எனில்
avi|mpg|mpeg|wmv|rmvb site:rapidshare.de

Music files எனில்
mp3|ogg|wma site:rapidshare.de

Programs,Applications files எனில்
zip|rar|exe site:rapidshare.de

eBooks files எனில்
pdf|rar|zip|doc|lit site:rapidshare.com

(Optionally add the word what you are particularly looking for.
உதாரணமாக தமிழ் சம்பந்த பட்ட mp3 கோப்புகள் தேட 
mp3|ogg|wma site:rapidshare.de tamil என கூகிளில் தட்டுங்கள்)

Example
http://www.google.com/search?hl=en&q=mp3%7Cogg%7Cwma+site%3Arapidshare.de+tamil&btnG=Google+Search
How to google search Rapidshare


இலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக

Tuesday, November 28, 2006

இலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக


அநேகரின் கனவுகளில் ஒன்று தன்னிடமுள்ள CD track, MP3 அல்லது WAV கோப்புகளை ரிங்டோனாக மாற்றம் செய்து தன் மொபைல் போனில் ஒலிக்க செய்வது.காசு கொடுத்தால் கிடைக்கும் MP3toRingtone converter-கள் அநேகம்.ஆனால் இதோ ஒரு முற்றிலும் இலவச MP3 to Ringtone converter உங்களுக்காக. ரிங்டோன் மட்டுமல்லாது உங்கள் கணிணியிலுள்ள பெரிய JPEG, BMP image களை சிறிதாக்கி உங்கள் செல்போனில் wallpaper-ஆக வைத்துகொள்ளவும் இது உதவி செய்கின்றது.
Over 60+ carriers, 15+ countries and 300+ handsets,Almost all US/Canada/EU/AU carriers supported என்கிறார்கள். 

உங்கள் போனில் இதை பயன்படுத்த முடியுமா என இங்கே சொடுக்கி பார்க்கவும் (Supported Phones list)
http://www.tonethis.com/index.php?page=supported_phones2

Product Page
http://www.tonethis.com/

Direct Download Link
http://www.tonethis.com/download/tonethisBeta.exe

Free Mp3 to Mobile Phone Cellphone ringtone converter - Make Cell phone wallpapers


கணிணி பவர் ஆப் மேட் ஈஸி



Tuesday, December 05, 2006



உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.
இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.
சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.
இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page
http://users.pandora.be/jbosman/poweroff/poweroff.htm

Direct Download Link
http://users.pandora.be/jbosman/pwroff30.zip

Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility

Tuesday, November 18, 2008

பதிவர் சந்திப்பு


 

 

வெண்பூ : எட்டணா கொடுத்து பயாஸ்கோப்பு பொட்டிய பார்த்தா மாதிரியே பார்க்கிறார். கேமிரா புடிக்க தெரியாத தாமிரா..

தாமிரா: என்னப்பா.. ஹீரோவே படம் எடுத்தா எப்படி? என்ன யாராவ்து எடுங்களேன்..

அதிஷா : நான் இன்னும் ஃபிலிம் ரோலே போடல. அதுக்குள்ள இந்த அலப்பறையா? பின்னாடி நின்னு இவரு டவுசர கிழிக்காம விட மாட்டேன்.

கும்க்கி: எனக்கு எதையவாது கீழ போட்டாதான் எடுக்க தெரியும். ஃபோட்டோ எடுக்கவா? கிழிஞ்சது கிருஷ்னகிரி..


கேபிள் சங்கர் : இவருதான் லக்கியா? டிக்கிய காணோம்..

லக்கி : பார்த்தா ஆட்டோ சங்கர் மாதிரி இருக்காரு. அமுக்கியே வாசிப்போம்.

டோண்டூ : சமீபத்தில் 1969ல என்னுடைய காரு இந்தப் பக்கமாத்தான் வந்தது......

 

 

பரிசல்காரன்: வேற ஒன்னும் இல்லைங்க.. நம்ம நர்சிம்ம அவங்க ஜே.கே.ரித்தீஷ்னு தப்பா நினைச்சு பந்தோபஸ்து கொடுக்கறாங்க..

நர்சிம் :அப்படியா? நான் இவர தனுஷ்னு நினைச்சு கொடுக்கறாங்கனு இல்லை நினைச்சேன்.

ரமேஷ் வைத்யா: நான் பரிசல்தான் குசும்பன் சொன்ன மாதிரி பரோல்ல வந்திருக்காரு. அதுக்குதான் பாதுக்காப்புனு நினைச்சேன்.

(உண்மையில் பிரபல பதிவர் கார்க்கி வருகிறார் என்ற‌ தகவல் உளவுத்துறைக்கு கிடைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தவே அங்கு போலீஸார் குவிக்கப்பட்டன்ர்)

 

வெண்பூ : எத போட்டாலும் தொப்பையை மறைக்க முடியலையே!!!

புதுகை.அப்துல்லா: நல்லாப் பாருங்க எனக்கு மீசையே இன்னும் வரல. அதனால் எல்லோரும் எனக்கு அண்ணே தான்..

கும்க்கி : 52 வயசாச்சு.எனக்கு கூடத்தான் வரல. என்ன செய்யுறது?

புரூனோ : என் கையில சிகரெட் இல்லை. நல்லாப் பார்த்துக்கோங்க.

குட்டிப்பிசாசு : நான் ஊதியே காட்டுறேன்..

(ந‌டுவில் இருப்பவர் அக்னிபார்வை)

 

 

பாலபார‌தி: நடுவுல இருப்பவருதான் 'அந்த' படத்தோட ஹீரோ. கூட இருக்கிறவங்க சைடு ஆர்ட்டிஸ்ட்.

கார்க்கி : ண்ணா.. ரமேஷ்தான் சைடு ஆர்டிஸ்ட். நான் இன்னும் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் தாண்ணா..

வலது ஓரத்தில் இருப்பவர் : மீசையெல்லாம் முறுக்கி காட்டுறேன். நம்மள கணக்குல எடுத்துக்க மாட்டறாங்களே!!!

_______________________________________________________

பி.கு: புகைப்படங்கள் பரிசலின் வலையில் சுட்டது. யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கனு நம்பி போடுறேன்..




(வெண்பூ, காமிராவுடன் தாமிரா, அதிஷா, கும்க்கி)



(மேலே: ரமேஷ்வைத்யா, முரளிகண்ணன், சந்தோஷ், பரிசல்காரன், பாலபாரதி, டாக்டர் ப்ரூனோ)

கீழ்வரிசை: குட்டிப்பிசாசு (அருண்), நர்சிம், கார்க்கி, வெண்பூ)



(கேபிள் சங்கர், லக்கிலுக், டோண்டூ ராகவன்)



(ஸ்ரீ, கார்க்கி, நர்சிம், தாமிரா, முரளிகண்ணன்)

(கார்க்கி, நர்சிம், ரமேஷ்வைத்யா, பாலபாரதி, சந்தோஷ்)



(அப்துல்லா, வெண்பூ, கும்க்கி)



(ப்ரூனோ, அக்னிப்பார்வை, குட்டிப்பிசாசு )




(_______________, சாரதாகுமார், பாலபாரதி, பரிசல்காரன், ரமேஷ்வைத்யா)



(ரெண்டாவது நிக்கிறது நர்சிம், பாக்கியெல்லாம் அதே தல-தான்!)

Friday, November 14, 2008

வேர்ட் டாக்குமெண்டை (.doc) பிடிஎப் (.pdf) கோப்பாக இலவசமாக மாற்றுதல் !!

பொதுவாக நீங்கள் உபயோகப்படுத்தும் வேர்ட் டாக்குமெண்ட் (.doc) என்ற பைல் எக்ஸ்டென்ஸனுடன் இருக்கும்...


வேர்ட் டாக்குமெண்ட் ஒரு எழுதி (எடிட்டர்) தான்...

நீங்கள் அனுப்பிய வேர்ட் டாக்குமெண்ட்டை எளிதாக திறந்து அதில் மாற்றங்கள் செய்துவிடலாம்...

அதனால் தான் அடோப் நிறுவனம் பி.டி.எப் என்ற வகையாக பைல்களை உருவாக்கியது...

.pdf என்ற பைல் எக்ஸ்டென்ஷனுடன் இருக்கும் இந்த வகையான கோப்புகளை எளிதில் மாற்றம் செய்ய இயலாது...

இதனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்...நம்பிக்கையோடு இருக்கலாம்...

https://www.pdfonline.com/convert_pdf.asp என்ற தளத்தில் மிக எளிமையாக உங்களது எம்.எஸ் வேர்டு பைல்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றும் வசதியை தருகிறார்கள்...

உங்கள் தேவை இணையம் மட்டுமே...மேலும் அதிகபட்சமாக 2 எம்.பி அளவுள்ள கோப்புகளை மாற்றலாம்...



படத்தின் மீது க்ளிக்கினால் பெரியதாக தெரியும்...

மொத்தம் இந்த இணைய தளத்தில் நாலே ஸ்டெப்பு...

1.மாற்றப்படவேண்டிய கோப்பு எங்கே இருக்கிறது் என்பதை பிரவுஸ் பட்டனை தொட்டு கணிப்பொறிக்கு காட்டவேண்டும்..

2.எந்த பெயரில் உங்கள் கோப்பு இருக்கவேண்டும் என்பதை சொல்லவேண்டும்

3.உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவேண்டும்...

4.கண்வர்ட் டு பிடிஎப் என்ற பட்டனை அழுத்தவேண்டும்...

அவ்ளோதாங்க...

இரண்டு நிமிடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பி.டி.எப் கோப்பு வந்து சேரும்
Thanks - Ravi

இச்சேவையில், தமிழ் கோப்புகளை மின்னூலாக மாற்றும்பொழுது எழுத்துருக்கள் தெரிவதில்லை.

'))')) said...

http://www.pdfforge.org/ 
its a freeby!

'))')) said...

அருமையான பதிவு.
இம்மாதிரியான சமூகத்தின் அவலங்களை சாடும் பதிவுகளை உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

:(

'))')) said...

openoffice is an another alternative for offline conversion of doc to pdf

Sunday, November 9, 2008

History of Photo

மிஸ்டர் ஜேபிஜி

டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா கிரிக்கெட் மைதானம் போனது இப்படி ஏகப்பட்ட நினைவுகள் இன்று டிஜிட்டல் இமேஜ்களாகி உங்கள் கணிணியில் இருக்கும். 

பல சமயங்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. நீங்கள் "இது பாப்பா 3 மாசமா இருக்கும் போது எடுத்த படம்" என சொல்ல மனைவி "இல்லை இது 6 மாசத்தில் எடுத்த படம் ஆர் யூ கிரேசி" என்பாள். துபாய் போனது 2003-ல் என நீங்கள் அடித்து சொல்ல இல்லை அது 2004-ல் என அவள் தகராறு செய்வாள்.இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர் தான் மிஸ்டர் ஜேபிஜி.

நீங்கள் நினைப்பது போல உங்கள் ஒளிப்படக்கருவி படம் பிடிக்கும் போது உருவாகும் .jpg கோப்பானது வெறும் படத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை. அந்த .jpg கோப்பானது இன்னபிற தகவல்களையும் தன்னகத்தே மறைவாய்க் கொண்டுள்ளதாம். உதாரணமாய் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது (நாள்,சமயம் எல்லாம் துல்லியமாய்),அப்போது பிளாஷ் உபயோகப் படுத்தப்பட்டதா இல்லையா போன்ற பல தகவல்கள். இத்தகவல்களை Exif அல்லது மெட்டாடேட்டா என்கின்றார்கள்.(EXIF stands for Exchangeable Image File - Examples of stored information are shutter speed, date and time, focal length, exposure compensation, metering pattern and if a flash was used etc)

ஆமாம்.இப்போது நீங்கள் உங்கள் மனைவியிடம் பந்தயம் கூட வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட Exif ரீடரை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட உங்கள் பாப்பாவின் போட்டோ சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நிமிடம் எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ளலாம். துபாய் போனது எந்த ஆண்டுவெனவும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் சொன்னது தான் சரியென்றால் "Something wrong with your computer"-ன்னு உங்கள் மனைவி சொல்வாள் என்பது வேறு விஷயம். ஆச்சர்யபடவேண்டாம்.
Download Exif Reader

இந்த முக்கியமான Exif தகவல்களை நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்யும்போது இழக்க நேரிடலாம். ஆதலால் போட்டோ எடிட்டிங் செய்யும் முன் அசலை அப்படியே பத்திரமாக வைத்துவிட்டு நகலை மட்டும் எடிட்டிங் செய்தல் நல்லது. 
அல்லது
கீழ்கண்ட இன்னொரு மென்பொருளால் இந்த Exif தகவல்களை பேக்கப்செய்து பத்திரப் படுத்திவிட்டு உங்கள் திருவிளையாடல்களை தொடரலாம். முடிந்ததும் மீண்டும் அந்த Exif தகவல்களை எடிட்செய்யப்பட்ட படத்தின் மீது மீட்டுக் கொள்ளலாம்.Backup exif before editing it , and then after editing restore it back using Exifer.
Download Exifer

நீங்கள் எடுத்த டிஜிட்டல் ஒளிப்படங்களெல்லாம் ஒரு ஃபோல்டரில் IMG_001.JPG, IMG_002.JPG, IMG_003.JPG.... என img-க்களாகவோ அல்லது DSC001.JPG, DSC002.JPG, DSC003.JPG...என dsc-க்களாகவோ தானாகவே பெயரிடப்பட்டு இருக்கும். இப்படி கண்டபடி சம்பந்தமேயில்லாமல் போட்டோக்களுக்கு பெயர்கொடுக்காமல் அந்த போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரத்தையே அதற்கு பெயராக கொடுத்தால் எப்படி இருக்கும்? (மேலே படம்) இதன் மூலம் பல்வேறு உங்கள் போட்டோக்களை காலகிரமபடி வரிசைப்படுத்துவதோடு அதை பார்வையிடும் போதும் ஒரு தொடர்வாய் பார்வையிடலாம் அல்லவா? அதற்கு உதவுவது தான் கீழ்கண்ட மென்பொருள். இது உங்கள் டிஜிட்டல் போட்டோக்களின் Exif தகவல்களை தானாகவே படித்து அதிலுள்ள நாள்படி உங்கள் போட்டோக்களை அழகாய் கிரமமாய் பெயர்மாற்றம் செய்யுமாம்.(Eg.2007-08-15 18.05.27.jpg)
Namexif-automatically rename photos with the date they were shot.
Download Namexif

நண்பர் muralidharan கேட்டிருந்தார்
Dear PKP sir, I am a professsional still photographer. Please send me some interested digital photographic software equal to photoshop, (freeware)

போட்டோஷாப்புக்கு இணையான செயல்பாடுகளுடன் கிடைக்கும் ஒரே இலவச ஒளிப்படக் கலவை மென்பொருள் அது GIMP தான் (GNU Image Manipulation Program). முயன்றுபாருங்கள்.கீழே சுட்டி.
http://www.gimp.org

கேள்வி

உங்கள் கேள்விக்கு

நண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.
வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /

Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான் ஆகவேண்டும். ஃபோல்டருக்கு பதிலாக Label என்று ஒரு வசதியிருக்கின்றது. இதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை பின்ஒருநாள் பார்வையிட வசதியாய் (ஒரு ஃபோல்டரில் போடுவதற்கு பதிலாக) அழகாய் லேபல் பண்ணி வைத்துக்கொள்ளலாமாம். முயன்று பாருங்கள்.

நண்பர் பாபு கேட்டிருந்தார்.
அன்பு நன்பர் பி கே பி அவர்களுக்கு,
முதலில் ஒரு உதவி: எனக்கு ஜெர்மனியில் இரண்டு வருடம் பணிபுரிய வேண்டியிருக்கிறது. வழக்கம்போல் மொழிப் பிரச்சனை முன்னிற்கிறது.தங்களுக்குத் தெரிந்து ஏதாவது "ஆங்கில வழி ஜெர்மனி மொழி"(English to German) or (Tamil to German)மென் புத்தகம் கிடைத்தால் அளிக்கவும்.மிகவும் உதவியாக இருக்கும்.


உங்களுக்குப் புதுமையான முற்றிலும் மாறுபட்ட ஒரு சுற்றுச்சூழலில் பணிபுரியச் செல்கின்றீர்கள். வாழ்த்துக்கள் பாபு. இதோ நீங்கள் கேட்டது.(Right click and save)

நண்பர் Purushothaman M S கேட்டிருந்தார்.
I am using AIRTEL GPRS in my mobile. any possible to browse website in my laptop by using AIRTEL GPRS Connection. I can connect my mobile with Bluetooth. But 
I can't connect internet.


உங்களுக்கு உதவுமென இந்த சுட்டியை கொடுத்துள்ளேன்.
Internet Connection using AirTel GPRS

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
வணக்கம் pkp நண்பரே நான் கோபி நீங்கள் கூறுவது எமது web side சம்பாதிப்பது பற்றிய தகவல்கள் நான் கேட்பது games முலமாக நாம் விளையாடி win பண்ணி அதன் முலமாக எமது address cheque or credit cad பணம் வறும் என்பதை போல கேள்விப்பட்டேன

நீங்கள் சொல்வது உண்மைதான் கோபி.www.bet365.com போன்ற தளங்கள் இதற்கு பிரபலம்.Gambling என்கின்றார்களே அந்த மாதிரியான சூதாட்டங்கள் தான் அவை. அதுமாதிரியான ஆட்டம் போட துணிவிருந்தால் புகுந்து பார்க்கலாம்.காசினோ, போக்கர் போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி பெட்டிங்-ல கூட பணம் பண்ணுகின்றார்கள். அடுத்த கிரிக்கெட் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என உங்களுக்கு கணிக்கத் தெரிந்திருந்தால் நன்றாக பணம் பண்ணலாம். பேபால்வழி உங்கள் இந்திய வங்கி கணக்குக்கு பணம் வந்து விடுமாம். விட்டதை பிடிக்கபோகின்றேன் விட்டதை பிடிக்கப்போகின்றேனென விட்டத்தை பிடித்தவர்கள் தான் அதிகம். தமிழில் சரியாய் தான் சூதாட்டம் என்கின்றார்கள், பெயரிலே சூது இருக்கின்றதே. அட்லாண்டிக் சிட்டி போனால் போன கடமைக்கு 10 டாலருக்கு விளையாடுவதோடு என் சூதாட்டம் முடிந்துவிடும். வயசான கிழம்கள் உக்காந்து ஆடும் ஆட்டம் தான் வியப்பைத் தரும்.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP, Could you please from where we can do online jobs... like website designing or some thing like that.. what to know for part time... looks i waste so much of time on inteenet simply... give some tips for earning plz....

நான் முதன் முதலாக இங்கு பரிந்துரைப்பது கிரெய்க்லிஸ்ட் தளம். அதன் சென்னை தளமோ அல்லது பெங்களூர் தளமோ போய் வேலைவாய்ப்புப் பகுதியை பாருங்கள்.நம்மவர்களையாப் பார்த்து தேடுவார்கள்.பெரிய ஃபார்மாலிட்டி இன்றி உடனடியாய் மாட்டும்.
கீழே கிளிக்கி வேட்டையாடலாம்.
http://chennai.craigslist.co.in/web/
http://bangalore.craigslist.co.in/web/

இது தவிர eLance.comguru.com போன்றவைகளும் Freelancers-களுக்கு வரப்பிரசாதம்.

நண்பர் myilvannan கேட்டிருந்தார்
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன், நன்றி. Can u please let me know about the online free diploma courses in film technology...


இலவசமாய் டிப்ளமோவா? இந்த காலத்திலயா?.... கமான்...மயில்வாணன்!! :)

நண்பர் நிஜாம்கான் கேட்டிருந்தார்.
பிகேபி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு நிஜாம். நான் நெட்வொர்க்கிங் துறையில் இருக்கிறேன்.எனக்கு Windows 2003 ல் Softeware Deployment,Raid concept ஆகியவற்றில் குழப்பம் இருக்கிறது.நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட windows 2003 ரேபிட்சேர் முறையில் என்னால் டவுன்லோடு செய்ய முடியவில்லை.எனவே அதை PDF முறையில் மறுவெளியீடு செய்யுமாறு வேண்டுகிறேன். 

இதோ இந்த சுடியை சொடுக்குங்கள்.முழுவதும் இறக்கமாக கொஞ்ச நேரம் பிடிக்கும்.(MCSE) - Mastering Windows Server 2003.pdf 

நண்பர் மகேஷ் கேட்டிருந்தார்
hi PKP, thanks for giving us valuvable information all fields..
can u please tell me how to download from megaupload as most of the download slot is full or not available from chennai!!
thank u.. 


இப்போதைக்கு leechz.com மின் MegaUpload Premium Link Generator பயன்படுத்துங்கள்.நல்லா வேலை செய்யுதாம்.(Update: It works great but beware of annoying advertisements. Farouk says "avast! antivirus"signal a virus alert. I dont know why.Waiting for siteadvisor.com report)

நண்பர் Natrajan கேட்டிருந்தார்
Hi PKP
Pl. advise. I have a DVD playing one hour. I can not upload on you tube. I tried yesterday - it took more than TEN hours saying ' uploading' and after TEN HOURS the connection disconnected. Can you advise me.


இதுமாதிரி பெரிய வீடியோக்களுக்கு கூகிள் வீடியோவே என் தெரிவு. Desktop Uploader பயன்படுத்தல் நல்லது.
https://www.google.com/video/upload/UploadInfo