Friday, November 14, 2008

வேர்ட் டாக்குமெண்டை (.doc) பிடிஎப் (.pdf) கோப்பாக இலவசமாக மாற்றுதல் !!

பொதுவாக நீங்கள் உபயோகப்படுத்தும் வேர்ட் டாக்குமெண்ட் (.doc) என்ற பைல் எக்ஸ்டென்ஸனுடன் இருக்கும்...


வேர்ட் டாக்குமெண்ட் ஒரு எழுதி (எடிட்டர்) தான்...

நீங்கள் அனுப்பிய வேர்ட் டாக்குமெண்ட்டை எளிதாக திறந்து அதில் மாற்றங்கள் செய்துவிடலாம்...

அதனால் தான் அடோப் நிறுவனம் பி.டி.எப் என்ற வகையாக பைல்களை உருவாக்கியது...

.pdf என்ற பைல் எக்ஸ்டென்ஷனுடன் இருக்கும் இந்த வகையான கோப்புகளை எளிதில் மாற்றம் செய்ய இயலாது...

இதனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்...நம்பிக்கையோடு இருக்கலாம்...

https://www.pdfonline.com/convert_pdf.asp என்ற தளத்தில் மிக எளிமையாக உங்களது எம்.எஸ் வேர்டு பைல்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றும் வசதியை தருகிறார்கள்...

உங்கள் தேவை இணையம் மட்டுமே...மேலும் அதிகபட்சமாக 2 எம்.பி அளவுள்ள கோப்புகளை மாற்றலாம்...



படத்தின் மீது க்ளிக்கினால் பெரியதாக தெரியும்...

மொத்தம் இந்த இணைய தளத்தில் நாலே ஸ்டெப்பு...

1.மாற்றப்படவேண்டிய கோப்பு எங்கே இருக்கிறது் என்பதை பிரவுஸ் பட்டனை தொட்டு கணிப்பொறிக்கு காட்டவேண்டும்..

2.எந்த பெயரில் உங்கள் கோப்பு இருக்கவேண்டும் என்பதை சொல்லவேண்டும்

3.உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவேண்டும்...

4.கண்வர்ட் டு பிடிஎப் என்ற பட்டனை அழுத்தவேண்டும்...

அவ்ளோதாங்க...

இரண்டு நிமிடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பி.டி.எப் கோப்பு வந்து சேரும்
Thanks - Ravi

இச்சேவையில், தமிழ் கோப்புகளை மின்னூலாக மாற்றும்பொழுது எழுத்துருக்கள் தெரிவதில்லை.

'))')) said...

http://www.pdfforge.org/ 
its a freeby!

'))')) said...

அருமையான பதிவு.
இம்மாதிரியான சமூகத்தின் அவலங்களை சாடும் பதிவுகளை உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

:(

'))')) said...

openoffice is an another alternative for offline conversion of doc to pdf

No comments: