Saturday, November 8, 2008

Adobe Integrated Runtime

இன்னொரு காற்று

கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் போல ஒரு அசைவேயின்றி மரத்துப்போய் இருந்தன அந்தகாலத்திய இணையப்பக்கங்கள். அப்புறமாய் html-ன் Marquee tag-ஐ வைத்து எழுத்துக்களை கொஞ்சம் ஓட விட்டனர். பின் animated gif-ஐ கண்டுபிடித்து படங்களுக்கு சிறிது உயிர் கொடுத்தனர். கடைசியாய் அடோபியின் flash வந்தாலும் வந்தது எல்லா இணைய பக்கங்களும் புத்துயிர் பெற்றன-பளாபளாவாயின-ஒவ்வொரு சட்டங்களும் உயிர்கொண்டோடின. இன்றைக்கும் யூடியூப் முதலான வெற்றிகரமான தளங்கள் உருவாக அது காரணமாயிற்று.

Pdf,Flash போன்ற அருமைகளை நமக்களித்த அதே அடோபி நிறுவனம் (adobe) இப்போது புதுசாக AIR என்று புதிய நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.Adobe Integrated Runtime என்பதுதின் சுருக்கம் தான் AIR.

இன்றைய இணையத்தை உங்கள் கணிணியின் விண்டோஸ் டெஸ்க்டாப்போடு அல்லது லினக்ஸ் டெஸ்க்டாப்போடு நெருக்கமுற இணைப்பது தான் இந்நுட்பம். உதாரணத்துக்கு கிரிக்கெட் ஸ்கோர் இணையத்தில் பார்த்துக்கொண்டே இருக்கின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். இனி அப்பப்போ அப்டேட்டட் ஸ்கோரை பார்க்க பிரவுசரை refresh செய்யவேண்டாம். உங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ள அந்த சிறு பளாபளா AIR சார் மென்பொருள் நீரோட்டம் போல ஸ்கோரை லைவாக உங்களுக்கு காட்டிக் கொண்டே இருக்கும். அதுபோல ஈபேயில் ஏலமெடுக்கும் போதும் உங்களின் தற்போதைய நிலை லைவாக உங்களுக்கு தெரிந்துகொண்டே இருக்கும்.ஒவ்வொரு முறையும் refresh செய்யவேண்டிய தேவைப்படாது.

இந்த AIR சார் மென்பொருள்கள் உங்கள் கணிணியில் நிறுவப்படும் Adobe Integrated Runtime எனும் மென்படலத்தின் மேல் ஓடுவதால் இந்த பயன்பாடுகளை நீங்கள் எல்லா OS-யிலும் பயன்படுத்தலாம்.

இந்த Runtime-ஐ நீங்கள் கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
http://get.adobe.com/air/ அல்லது
http://airdownload.adobe.com/air/win/download/1.0/AdobeAIRInstaller.exe

புதுசு புதுசாக பல AIR சார் மென்பொருள்கள் வெளிவந்தவாறு உள்ளன. உங்களுக்கு HTML, CSS மற்றும் Javascript தெரிந்திருந்தால் அல்லது AJAX, Flash, Flex மற்றும் ActionScript தெரிந்திருந்தால் இது மாதிரியான Adobe’s AIR சார் பயன்பாடுகளை எளிதாய் படைக்கலாம். இப்போதைக்கு நல்ல கிராக்கியாம். சூப்பராய் ஒரு பயன்பாட்டை உருவாக்குங்கள். சீக்கிரமாய் உலக அளவில் பிரபலமாயிடுவீர்கள்.
இதற்கான SDK இங்கே கிடைக்கின்றது.http://www.adobe.com/products/air/tools/sdk/
சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.http://www.adobe.com/support/documentation/en/air/

உதாரணத்திற்கு AIR-ல் உருவான கூகிள் ரீடர் ReadAir-ஐ முயன்றுபாருங்கள்.
http://code.google.com/p/readair/

லைட்வெயிட்டாய் கண்ணாடிப் பட்டுப் போல் பளபளாவென உங்கள் டெஸ்க்டாப் வரும் இந்த AIR இனி என்னென்ன மாயங்கள் செய்யப்போகின்றதோ? 

No comments: