Saturday, November 8, 2008

view full page your web

Thursday, September 25, 2008

ஒரு இணையப் பக்கத்தை முழுவதுமாகக் கைப்பற்ற



கைப்பற்றுதல் என்பது இங்கே ஒரு இணையப்பக்கத்தை அப்படியே ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஆக எடுப்பது.

எல்லோரும் பிரிண்ட் ஸ்க்ரீன் பற்றித் தெரிந்து இருப்பீர்கள்.

பிரிண்ட் ஸ்க்ரீன் என்கிற சாவியை உங்கள் விசைப்பலகையில் அழுத்தினால் கணினித்திரையில் உள்ள அனைத்தும் க்ளிப்போர்டில் பதிவாகி இருக்கும். ஏதேனும் ஒரு படம் வரையும் மென்பொருளில் (உதாரணமாக் பெயிண்ட் பிரஷ்) பேஸ்ட் செய்தால் திரையில் உள்ள தகவல் ஒரு படமாக விழும். அதைக் குறிப்பிட்ட படவடிவில் பதிந்துகொள்ளலாம்.

ஆனால் திரையின் அளவை விட இணையப்பக்கத்தின் அளவு நீளமாகவோ, அகலமாகவோ இருந்தால் அந்த நேரத்தில் பிரிண்ட் ஸ்க்ரீன் என்பது நமக்கு உதவாது.

ஒரு பக்கத்தை முழுவதும் படமாக மாற்ற (எவ்வளவு நீளமாகவோ,அகலமாகவோ இருந்தாலும்) ஒருபயன்பாட்டுத்தளம் உள்ளது.

இந்தத்தளத்தின் முகவரிப்பெட்டியில் குறிப்பிட்ட இணையப்பக்கத்தின் முகவரியை உள்ளிட்டால் சிறிது நேரத்தில் அந்தப்பக்கமானது முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டு ஜேபிஜி / பி என் ஜி வடிவில் நமக்குக் கிடைத்துவிடும். 

குறிப்பு :
இங்கே மாடலாக இடம்பெற்றிருப்பது நண்பர் SCSSundar கூடுதுறை அவர்களின் வலைப்பூ. அவருக்கு எனது நன்றிகள்.

பயன்பாட்டுத்தள முகவரி :
http://www.superscreenshot.com/

No comments: