Saturday, November 8, 2008

ஆடியோ ரெக்கார்டிங்

ஆடியோ ரெக்கார்டிங்

சில இசைத்தளங்களில் ஸ்டிரீமிங் ஆடியோ வைத்திருப்பார்கள். பாடல்களை கேட்கமட்டுமே செய்யலாம். ஆனால் MP3-யாக அவற்றை இறக்கம் செய்ய முடியாது வென்றிருக்கும். அதனால் நாம் ஆன்லைனில் இருக்கும் போது மட்டுமே அப்பாடல்களை கேட்கலாம். ஆஃப்லைனிலோ அல்லது CD பிளயர்வழியோ அந்த உங்கள் அபிமான பாடல்களை கேட்கமுடியாது. இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுவதுதான் ஆடியோ ரெக்கார்டிங். உங்கள் ஸ்பீக்கரில் ஒலிக்கும் எல்லா ஒலியையும் நீங்கள் MP3-யாக பதிவு செய்யும் வசதி உங்கள் கணிணில் உள்ளது தெரியுமோ?

விண்டோஸ் எக்ஸ்பியிலுள்ள Accessories ->Entertainment ->Sound Recording சுத்த வேஸ்ட். அதனால் 60 நொடிகள் தான் ஒலி பதிவு செய்ய இயலும்.

உங்களுக்கு தேவை ஆடசிட்டி. இந்த இலவச மென்பொருளை முதலில் நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.
Download Audacity

பின் நீங்கள் ஆடசிட்டியில் ரெக்கார்டு செய்ய முயலும் போது அதுவே கேட்கும் LAME DLL-ஐ (Lame Aint an MP3 Encoder) கீழ்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Download lame_enc.dll

மறக்காமல் Audacity-ல் மேலே படத்தில் கண்ட படி Stereo Mix-ஐ தெரிவுசெய்து கொள்ளுங்கள். Edit -> Preferences -> Audio I/O-ல் உங்கள் சவுண்ட் கார்டு தெரிவுசெய்யபட்டிருக்க வேண்டும். அவ்ளோதான்.

இசையை ஓட விட்டதும் அந்த சிவப்பு பொத்தானை அழுத்துங்கள். ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆகிவிடும்."Export as MP3" யை செலக்டி MP3 ஆக சுட்டுவிடலாம். Thats easy.

(Updated: நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் பரிந்துரைக்கும் இன்னொரு அருமையான இலவச எளிய மென்பொருள் இங்கே http://getitfreely.co.cc/content/record-internet-radio-embedded-audio)

No comments: