Saturday, November 8, 2008

tamil calander

சிறு துளிகள்


இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.

மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.

அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது.

No comments: