Sunday, November 9, 2008

ஆன்லைன் நாட்குறிப்பேடுகள்

நாட்குறிப்புக்கள்

"டியர் சார்! எனக்குத் தெரியாமல் நீங்கள் இப்பொழுது என் டயரியைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். தப்பு;பாபம் மூடி வைத்துவிடுங்கள். இல்லை என்றால் ஆயிரம் வருஷம் தலைகீழாக நரகத்தில் தொங்கவேண்டியது வரும்" -இப்படிதான் அவன் டையரியின் முதல் பக்கத்தில் எழுப்பட்டிருக்கும். உள்ளே எல்லாம் ஆயிரம் கிறுக்கல்கள்.அவன் சந்தோஷமாக வீடு வந்தால் சந்தோசமாய் கிறுக்குதுண்டு.சோகமாய் வந்தால் அந்த கிறுக்கல்கள் எல்லாம் சோகமாய் இருக்கும். யாரிடமோ உள்ள பொல்லாத கோபம் அவன் டயரியில் வார்த்தைகளாக எழுதப்பட்டு அணைக்கப்பட்டும் போனதுண்டு.நேருக்கு நேராய் சவால்விட தெம்பில்லா விட்டாலும் அவைகள் எல்லாம் அமைதியாய் எழுதுக்களாகின. கடவுளிடம் கூட நியாயம் கேட்டு எழுதியிருக்கின்றான். 18 வருடங்கள் கழித்து இப்போது அதை புரட்டிப்பார்க்கும் போது அந்த பிஞ்சு நெஞ்சு பட்ட ரணங்கள், குழப்பங்கள், சுகங்கள் எல்லாம் பேனா மையில் சிறுவன் கையெழுத்தில், பாதி புரிகின்றது, மீதி புரிகிறதில்லை. யாருக்கும் புரியக்கூடாதுவென அப்போது சுழற்றி சுழற்றி எழுதியிருக்கின்றான். இப்போது அவனுக்கே புரிவதில்லை.

இப்படி மை கொண்டு டைரி எழுதி தங்கள் சுமைகளை எழுத்துக்களாக இறக்கி வைத்து இதயத்தை இலகுவாக்கிக் கொண்டோர் எண்ணிக்கை இங்கு அநேகம். யாரிடமோ சொல்லித் தீர்த்தது போல் இருக்கும்.

காகித டயரி போய் டிஜிட்டல் டயரி வந்தது, பின் அதுவும் போய் மென்பொருள் டயரியாகி இன்று ஆன்லைன் டயரியாகிவிட்டது. என்னத்தான் நுட்பங்கள் மாறினாலும் அந்த காகித நாட்குறிப்பேடுகள் கொடுக்கும் அந்நியோன்யமும் நெருக்கமும் இந்த சிலிக்கான் சிப்புகள் கொடுப்பதில்லை.அந்த காகிதத்திலிருக்கும் ஒவ்வொரு கைச்சுழியும், மைத்துளியும் அவனை அக்காலத்திற்கே அல்லவா கொண்டு செல்கின்றது. டிஜிட்டலால்களால் அது முடிகிறதில்லையே. வரும் சந்ததிகள் ஆயிரம் ஆடம்பரங்கள் பெற்றாலும் இது போன்ற அபூர்வ அற்பஆனந்தங்களை இழக்கப்போகின்றார்கள் என்பதை நினைக்கும் போது சற்று கவலையாகத்தான் இருக்கின்றது.

நண்பர் Shanraj கேட்டிருந்தார்
PKP அவர்களே,
செயல் நினைவூட்டி பயனுள்ளதாய் இருக்கிறது.மிக்க நன்றி.I am looking for a free digital diary. Daily activities store பண்ணுவதற்கு வசதியாக... எதாவது இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்

ஷான்! எனக்கு தெரிந்து மூன்றுவகையான கணிணிசார் டைரிகள் இருக்கின்றன.
ஒன்று உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ள அப்புறம் அவ்வப்போது டைப்பிக்கொள்ள வசதியானது.இதற்கு உதாரணமாக iDailyDiary-யை சொல்லலாம். இது ஒரு இலவச மென்பொருள்.யூனிகோட் வசதியிருப்பது இதன் மற்றொரு சிறப்பு அம்சம்.
Direct Download Link
http://www.splinterware.com/download/iddfree.exe
Homepage
http://www.splinterware.com

இன்னொன்று உங்கள் USB பென்டிரைவிலேயே வைத்து செல்ல வசதியான போர்ட்டபிள் டையரி.இதற்கு உதாரணம் EssentialPIM Portable Edition
Direct Download Link
http://www.essentialpim.com/download/essentialpimport2.exe
Home Page
http://www.essentialpim.com

மூன்றாவதாக ஆன்லைன் நாட்குறிப்பேடுகள்.எல்லாமே இணையத்தில் எழுதப்பட்டு இணையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படும். இதற்கு உதாரணமாக
http://www.inboxjournal.com-ஐ சொல்லலாம்.

மூன்றையும் ஆய்ந்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

From PKP`s Diary:
தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்.
- யாரோ


"சுனாமி பற்றி அறிந்து கொள்வோம்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Know Tsunami in Tamil pdf ebook Download. Right click and Save.Download

No comments: