Sunday, November 9, 2008

cable under sea

கடலடியில் சந்தித்தோம்

நாடுகளிடையேயான இணைய பரிமாற்றங்களில் 90 சதவீதம் பைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியும் 10 சதவீதம் செயற்கைகோள்கள் வழியும் நடக்கின்றன. இந்த பைபர் ஆப்டிக் கேபிள்கள் கடல்வழியாய் பூமியின் அனைத்து கண்டங்களையும் இணைக்கின்றன. அண்டார்டிக்காவைத் தவிர. (சில கடலடி கேபிள் படங்கள் கீழே)

கடல் வழி கேபிள்கள் போடுவது ஒன்றும் புதிய யுக்தி அல்ல. 1850-களிலேயே இதுமாதிரி கடலடிகேபிள்களை இங்கிலாந்தில் போட்டிருக்கின்றார்கள் .1870-ல் மும்பையும் லண்டனும் இப்படி கடலடி கேபிள்களால் இணைக்கப்பட்டிருந்தன.

இன்றைக்கு துபாயின் E-marine, சிங்கப்பூரின் Asean Cableship போன்ற நிறுவனங்கள் கப்பல்கொண்டு இந்தமாதிரி கடலடி கேபிள்களை நிறுவுகின்றன. சும்மா இல்லை, ஒரு மீட்டர் பைபர் ஆப்டிக் கேபிளின் எடை 10 கிலோ இருக்குமாம்.

இந்தியாவை உலகெங்கும் இணைக்க கீழ்கண்ட நம் நகரங்களிலிருந்து கடலடி நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள்கள் பல நாட்டு நகரங்களுக்கும் செல்கின்றன. அவை மும்பை, பூனா, சென்னை மற்றும் கொச்சின்.

நமது சென்னையிலிருந்து கீழ்கண்ட கடலடி கேபிள்கள் அக்கரைசீமைக்கு செல்கின்றது.

TIC (Tata Indicom Cable)- இந்த fiber-optic கேபிள் சிங்கப்பூருக்கு செல்கின்றது. இது முழுக்க முழுக்க Tata Communications (முன்னாள் VSNL)-க்கு சொந்தமானது. இதன் நீளம் 3175 கிமீ. இதன் வேகம் 5.12 Tbps.

SEA-ME-WE 4 (South East Asia–Middle East–Western Europe 4)- இந்த கடலடி கேபிளின் ஒரு கிளை சிங்கப்பூருக்கும் மற்றொரு கிளை கொழும்பு போய் பின் மும்பை போய் அப்படியே மேற்கத்திய நாடுகளுக்கும் செல்கின்றது.

i2i CN - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்கின்றது.இது Bharti Airtel -க்கு சொந்தமானது.

FALCON - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து ஹாங்காங்குக்கு செல்கின்றது.இது Reliance Communications -க்கு சொந்தமானது.

இப்படி எனக்கு தெரிந்து நான்கு கடலடி கேபிள்கள் சென்னையை உலகோடு இணைக்கின்றது.

இன்னொரு LOCOM எனும் கடலடி கேபிளும் நமது சென்னையை மலேசியாவோடு இணைக்கின்றது என்கின்றார்கள். உறுதியாய் தெரியவில்லை.

Reliance Communications-ன் Reliance FLAG - தான் உலகின் மிக நீளமான தனியார் கடலடி கேபிள் ஆகும். இது 65,000 கிமீ நீளமானது.

அடுத்ததொரு யுத்தம் வந்தால் Star war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்பு செயற்கை கோள்களை தகர்ப்பது போல Fiber war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்புக்கு உதவும் இந்த கடலடி கேபிள்களையும் சில முட்டாள் மனிதர்கள் தகர்ப்பார்கள். அதுவரைக்கும் உலகம் இப்படிச் சுருங்கிக்கொண்டே தான் இருக்கும்.

இதோ நான் எங்கோ இருந்து எழுதியிருக்க நீங்கள் எங்கோ இருந்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே. எந்த கடலடி கேபிள் வழி சந்தித்தோமோ?





உலக கடலடி கேபிள்கள் மேப் pdf வடிவில்
http://www1.alcatel-lucent.com/submarine/refs/World_Map_LR.pdf

உலக கடலடி கேபிள்கள் மேப் flash வடிவில்
http://www.tatacommunications.com

மு.பெ.சத்தியவேல் முருகனார் திருமந்திரச் சிந்தனைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. M.P.Sathyavel Muruganaar Thirumanthira Sinthanaigal in Tamil pdf ebook Download. Right click and Save.Download

No comments: