Saturday, November 8, 2008

நம் குரல்

ஏதோ ஒரு பாட்டு

நம் குரல்தனை எழுத்துக்களாக மாற்றும் speech recognition நுட்பம் வளர்ந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

FM-ல் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்கின்றோம். ஏனோ அது பிடித்துபோய்விட்டது. நம்மை அறியாமலே நாம் அதை முணுமுணுக் கொண்டே வீடு வருகின்றோம். கவுச்சில் (Couch) உட்காரும் போது மீண்டும் அந்த பாடல் நினைவுக்கு வருகின்றது. இன்னொரு முறை அந்த இனிய இசையை கேட்டால் நன்றாய் இருக்கும் போல் தோன்றுகின்றது. ஆனால் அது என்ன பாடல், யார் பாடியது, எந்த ஆல்பத்திலிருந்து என ஒன்றுமே தெரியாது உங்களுக்கு. என்ன செய்வது இப்போது?

மிடோமி (midomi) உங்களுக்கு உதவுகின்றது. நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் மிடோமி இணையதளம் போய் அந்த பாடலை 10 நொடிகள் பாடி அல்லது hum-மி காண்பியுங்கள். அவ்வளவுதான். அவர்கள் அந்த பாடலை தேடி உங்களுக்கு கண்டுபிடித்து தருகின்றார்கள். என்னமோ MARS அதாவது Multimodal Adaptive Recognition System என்றொரு தொழில் நுட்பமாம்.இந்த அட்டகாச வேலைகளையெல்லாம் செய்கின்றது. டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் என்னப் பாடல் என கண்டுபிடிக்க மிடோமியிடம் சில செக்கண்டுகள் ரெக்கார்டு பண்ணி காட்டினாலே போதும் நொடியில் அது அந்த பாடல் பற்றிய முழு ஜாதகத்தைம் வைத்துவிடுகின்றது. iPhone-னிலும் இது கையடக்க பயன்பாடாய் இலவசமாய் கிடைக்கின்றது.

http://www.midomi.com

Backstreet Boys-ன் "Show me the meaning" பாடலை எனது கனகனத்த குரலில் பாடிக்காண்பித்தேன். மிடோமி உடனே அதை கண்டுபிடித்து விவரத்தை தெரிவித்ததோடல்லாமல் அந்த பாடலின் யூடியூப் வீடியோக்கான சுட்டியையும் கொடுத்து அசத்தியது. ஆச்சரியமாய் இருந்தது.

இது போல தமிழிலும் வர இன்னும் கொஞ்சநாள் தவம் இருக்கவேண்டும்.

அப்போது நாம் இருமினாலும் தும்மினாலும் அது யாருடைய இருமல் யாருடைய தும்மல் என கணிணியார் கரேட்டாக கண்டுபிடித்துச்சொல்வார்.

No comments: